Friday, August 29, 2025
HomeCrimeஇலங்கை வரலாற்றில் பதிவான சவால் மிக்க பொலிஸ் நடவடிக்கை - விசேட நீதிமன்றம் தயார்!

இலங்கை வரலாற்றில் பதிவான சவால் மிக்க பொலிஸ் நடவடிக்கை – விசேட நீதிமன்றம் தயார்!

special task and achivment by sri lanka police 6905

இலங்கை வரலாற்றில் பதிவான சவால் மிக்க பொலிஸ் நடவடிக்கை குறித்து வௌிப்படுத்திய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தற்போது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்பில் இருப்பதாகக் கூறினார்.

இலங்கை பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் சர்வதேச பொலிஸாரின் ஆதரவுடன் இந்தோனேசிய பொலிஸாரால் குறித்த குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் அரசியலில் ஈடுபடும் வரலாறு இருந்ததாகவும், இன்று அந்த சூழல் மாறிவிட்டது என்றும், குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

பல சந்தர்ப்பங்களில், இந்த நாட்டில் குற்றங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் வழிநடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அத்தகைய குழுக்கள் குறித்த சட்ட முடிவுகளை அரசியல் அழுத்தமின்றி எடுக்க பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

டுபாய், ஓமன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறிய பொலிஸ்மா அதிபர், இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஆதரவளித்த இந்தோனேசிய தூதரகத்திற்கு விசேட நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்,

“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு விசேட நீதிமன்றத்தை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நாங்கள் இப்போது திட்டமிட்டுள்ளோம்.குறிப்பாக அவர்களை தண்டிக்க.

ஒரு நாகரிக சமூகமாக, இந்த செயல்முறை சட்டத்தின் முன் நடைபெறுகிறது.

தற்போது, பல விசேட மேல் நீதிமன்றங்களை நிறுவ திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்.

முழு வீச்சில் நடைபெறும் இந்த அனைத்து செயற்பாடுகளும் அவர்களுக்கு உடனடியாக தண்டனையை பெற்றுத் தரவே” என்றார்.

special task and achivment by sri lanka police 6905

மேலும் வாசிக்க :

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்திற்கு யாழ் மாணவர்கள் ஆதரவு!

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!

உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!

எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10

வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!

இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular