Son dies after tree fell while being cut by father 4059
வெலிகேபொல – ரங்வல பிரதேசத்தில் தந்தை வெட்டிய மரத்தின் கிளை ஒன்று கீழே நின்றிருந்த மகன் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் வெலிகேபொல வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி கற்கும் 13 வயதுடைய தரிந்து லக்ஷான் குமாரகே என தெரியவந்துள்ளது.
வீட்டிற்கு அருகில் உள்ள மரம் ஒன்றை தந்தையும் இன்னொரு நபரும் சேர்ந்து வெட்டும் போது இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் குறித்த சிறுவன் உயிரிழந்தார்.
சடலம் கஹவத்தை. வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வெலிகேபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Son dies after tree fell while being cut by father 4059
இதையும் படியுங்கள்
வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து பலி!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
