Tuesday, January 14, 2025
HomeLocal Newsவிமான நிலையத்தில் பழிவாங்கப்பட்ட சிறிதரன் எம்.பி!

விமான நிலையத்தில் பழிவாங்கப்பட்ட சிறிதரன் எம்.பி!

siridaranmp was avenged at airport 5158

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்றிருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக செல்ல சென்றபோது, விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், விசாரணைகளின் பின்னர் பயணத்திற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இராஜதந்திர கடவுசீட்டினை வைத்திருக்கும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை இவ்வாறு நடத்தியதை ஏற்று கொள்ள முடியாது என சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பசறை நோக்கி சென்ற பேருந்து விபத்து – 13 பேர் படுகாயம்!

சிகரெட் மற்றும் மதுபான விலை அதிகரிப்பு!

சிவஞானம் சிறிதரன் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இருப்பதுடன் அவர் இலங்கை நாடாளுமன்றில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்குகின்றார்.

இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து உரையாற்றியும் இருந்தார்.

இந்நிலையிலேயே அவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பயனிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இச்சம்பவம் ஒரு பழிவாங்கும் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எமக்கு தோன்றுகிறது.

எனவே இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அநுர அரசாங்கத்திற்கு உண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

siridaranmp was avenged at airport 5158

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.

VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவைகள்!

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவைகள்!

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular