Monday, February 10, 2025
HomeHealth Newsசோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு!

சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு!

Shortage of sodium bicarbonate injections 2793

சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும்,உடலுறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில்,வைத்தியர்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோடியம் பைகார்பனேட் தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்க இரண்டு ஆண்டுகளானதே சோடியம் பைகார்பனேட் தடுப்பூசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவ வழங்கல் பிரிவு நிறுவனத்திற்கு இதுவரை ஓர்டர்களை வழங்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரித்து இறக்குமதி செய்யுமாறு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் மற்றுமொரு நிறுவனம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள போதிலும், இதுவரை அனுமதியும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு அலுவலகத்தில் மீண்டும் நீண்ட வரிசை – குழப்பநிலையும்…

அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இந்த தடுப்பூசியின் அவசியம் குறித்து மயக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் வினோதனி வணிகசேகர தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைக்கு இந்த மருந்து தேவை. சிக்கல்கள் ஏற்பட்டால், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது சோடியம் பைகார்பனேட் தேவைப்படுகிறது.

இது நோயாளிகளின் இரத்தத்தில் அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. இது அன்றாட தேவைக்கு பயன்படும் மருந்து அல்ல.ஆனால் இக்கட்டான சூழ்நிலைகள் இருக்கும்போது, ​​​​அது அவசியமாகிறது, ”என்று அவர் கூறினார்.

Shortage of sodium bicarbonate injections 2793

இதையும் படியுங்கள்

அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு

காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது

புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்

தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!

நட்சத்திர ஹோட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம்!

இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்த பாலத்தீனர் கூட்டத்தில் இருந்த 3 வயது சிறுமி என்ன ஆனார்?

இஸ்ரேல் ராணுவத்தினரால் சோதனை மையத்தில் நிறுத்திவைக்கப்பட்டவர்கள் மத்தியில் ஜூலியா

மோதி, வங்கதேச இந்துக்கள் பற்றிய டிரம்ப் ட்வீட்டால் விவாதம் எழுவது ஏன்? முழு பின்னணி

பிரதமர் மோதி, டொனால்ட் டிரம்ப், இந்துக்கள், வங்கதேசம், கமலா ஹாரிஸ்
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular