Friday, August 1, 2025
HomeLocal NewsWeather Newsபல மாகாணங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை!

பல மாகாணங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை!

Severe lightning warning for several provinces 6531

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் உள்ள வானிலை முன்னறிவிப்பின்படி இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட மாகாணங்களிலும் மாவட்டத்திலும் பல இடங்களில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை (பொத்துவில்) ஆகிய மாவட்டங்களிலும் இன்று முதல் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.


பெரும்பாலும் வடமாகணத்தில் எதிர்வரும் 03ஆம் திகதி முதல் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் சில நாட்களுக்கு (பெரும்பாலும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

Severe lightning warning for several provinces 6531

மேலும் வாசிக்க :

https://youtube.com/watch?v=MUM7wk7QOTA%3Ffeature%3Doembed
https://youtube.com/watch?v=AHN_ppwYFrM%3Ffeature%3Doembed

GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் பொலிஸார்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular