seven people killed in accidents Sri Lanka 6395
UPDATE – மீமுரே கரம்பகெட்டிய பகுதியில் வேன் ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர்கள் மீரிகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து 5 வயதான பிள்ளை உள்ளிட்ட மூன்று பேர் தெல்தெனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
00000000000000000
நாரம்மல மற்றும் மீமுரே பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியின் வலது பக்கத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு எதிர் திசையில் பயணித்த பேருந்து மீது மோதிய விபத்தில் சாரதியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
நாரம்மல பொலிஸ் பிரிவில் உள்ள நாரம்மல-கிரியுல்ல வீதியில் நேற்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
9 மற்றும் 11 மாதங்களேயான இரண்டு குழந்தைகளும் 38 வயதான சாரதியுமே இவ்வாறு உயிரிழந்தனர்.
இவர்கள் திவுல்லெவ, மஹாவ பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, மீமுரே கரம்பகொல்ல பகுதியில் நேற்று (19) மாலை வேன் ஒன்று கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது.
மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய வேன், அதிக வளைவு கொண்ட பிரதான வீதியின் மேல் வளைவிலிருந்து கீழ் வளைவு வரை 30 மீற்றர் கவிழ்ந்து மீண்டும் பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது.
விபத்தில் இறந்தவர்களில் மூன்று பெண்களும், ஆணும் அடங்கின்றனர்.
அதேநேரம், விபத்தில் குழந்தையொன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் வேனில் 6 பேர் இருந்துள்ளதுடன், அப்பகுதி மக்கள் வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
seven people killed in accidents Sri Lanka 6395


மேலும் வாசிக்க :
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!
வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!
புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!
பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!
நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!
தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்
பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு
