Samudrika women prepare double world record 6714
மணப்பெண் மற்றும் அழகுக்கலையில் இரண்டு உலக சாதனைகளை ஒரே மேடையில் இம்முறை நிலைநாட்டவுள்ளதாக சாமுத்ரிகா அழகுக்கலை பயிற்சி நிலைய நிறுவனர் திருமதி அனு குமரேசன் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “கடந்த முறை எமது அழகுக்கலை பயிற்சி நிலையத்தினால் அழகுக்கலை சம்பந்தமான ஒரு உலக சாதனை நிலைநாட்டப்பட்டு அது ஆசிய சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டு எமது சாமுத்ரிகா அழகுக்கலை பயிற்சி நிலையத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டோம்.”
அதே வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ம் திகதி கொழும்பிலுள்ள கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ள போட்டியில் துறைசார்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் மணப்பெண் மற்றும் அழகுக்கலை என இரு துறைகளிலும் ஒரே நிகழ்வில் உலக சாதனை புரிய திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
அத்துடன் இம்முறை இந்த உலக சாதனை நிகழ்வானது ஐரோப்பாவிலிருந்து வருகை தரும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நடுவர்களால் உறுதிப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேநேரம் இந்த இரட்டை உலக சாதனை நிகழ்வின் ஞாபகார்த்தமாக மகரகமை அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் சிறுவர் பிரிவிற்கு தேவையான வைத்திய உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Samudrika women prepare double world record 6714
மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
