Request made government import hybrid vehicles 4317
ஹைபிரிட் (கலப்பு) வாகன இறக்குமதிகளின் போது, அவற்றின் இயந்திர திறனின் அடிப்படையில் வரி விதிக்கப்பட்டால், அது நுகர்வோர் மற்றும் அரசாங்கம் இருவரையும் திருப்திப்படுத்தும் என்று தெரிவிக்கபபட்டுள்ளது.
இதன்போது, நாட்டில் வாகனங்களின் விலையும் குறையும் என்று ஜப்பான் இலங்கை வணிக சபையின் தலைவர் ஜகத் ராமநாயக்க (Jagath Ramanayake) கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் தகவல்களை வழங்கிய அவர், ஹைபிரிட் வாகனங்களைப் பயன்படுத்துவதில் உலகளாவிய போக்கு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் அல்லது டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடும்போது ஹைபிரிட் வாகனங்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நியச் செலாவணியும் குறைந்தளவிலேயே தேவைப்படுகிறது.
இந்தநிலையில், அரசாங்கத்திற்கு நிலையான வருவாய் ஓட்டத்தை உறுதி செய்யும் வகையில், இயந்திர திறனின் அடிப்படையில் வரிகளை விதிக்கும் அதே வேளையில், பயன்படுத்தப்பட்ட அல்லது புத்தம் புதிய வாகனங்களை அரசாங்கம் இறக்குமதி செய்ய வேண்டும் என்று ராமநாயக்க முன்மொழிந்துள்ளார்.
இதேவேளை சுமார் ஐந்து வருட இடைநீக்கத்திற்குப் பின்னர், 2025 பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.
Request made government import hybrid vehicles 4317
Request made government import hybrid vehicles 4317