Thursday, July 31, 2025
HomeLocal NewsWeather Newsமீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

Red alert warning issued to fishermen 6407

நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Red alert warning issued to fishermen 6407

மேலும் வாசிக்க :

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!

வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!

புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!

பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!

நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!

தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular