Wednesday, July 30, 2025
HomeLocal Newsபளையில் மீட்கப்பட்ட 12 கஞ்சா பொதிகள்!

பளையில் மீட்கப்பட்ட 12 கஞ்சா பொதிகள்!

கிளிநொச்சி பளை பகுதிக்கு கடலால் கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 25 கிலோ பெறுமதியான கஞ்சா பொதிகள் நேற்றையதினம் வியாழக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது வெற்றிலைக் கேணி கடற் பரப்பினால் கடத்திவரப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பொதிகள் சில பளைப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதன் படி இக் குறித்த குளப் பகுதியை சோதனையிட்ட போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பொதி செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக பளைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை எடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது ஆகும் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular