ranil court case again october bailled out 6882
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று (26) பிற்பகல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கடந்த 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் இன்று (26) நீதிமன்றில் ஆராயப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் குழு பிணை பெறுவதற்காக நீதிமன்றத்தில் பல குறிப்பிட்ட சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இதயத்தில் உள்ள நான்கு முக்கிய தமனிகளில் மூன்று அடைபட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, அந்த மருத்துவ நிலைமைகள் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் , முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்து சென்றிருந்த போது எந்த அரச தலைவரையும் சந்திக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பாக தணிக்கை நடத்த ஜனாதிபதி செயலகத்தின் தணிக்கை அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஏற்பட்ட அனைத்து செலவுகளும் ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இருந்ததால், தேசிய தணிக்கை அலுவலகம் நடத்திய தணிக்கையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும், அந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பினர் நீதிமன்றில் முன்வைத்த சாட்சியங்கள் மற்றும் சமர்ப்பணங்களை ஆராய்ந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதியை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
“அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சிப்பது ஊடகங்களின் ஔிப்பதிவில் காணக்கிடைத்தது.
இதற்கிடையில், பொலிஸ் நீர்த்தாரை வாகனங்கள், பொலிஸார், கலகத் தடுப்பு பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சியினர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் மற்றும் கொம்பனித்தெரு வரையிலான பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பெருந்திரளானோர் கூடியதாக செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனிடையே, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தசூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்வையிடுவதற்காக தாம் வைத்தியசாலைக்கு சென்றதாக வௌியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தாம் வைத்தியசாலைக்கு சென்றிருந்தால் அதை நிரூபிக்குமாறு பதுளையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தவறான தகவலைப் வௌியிட்ட ஊடக நிறுவனம் அதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் சவால் விடுத்துள்ளார்.
அங்கு பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
தவறான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நாம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
நான் சென்றிருந்தால், அந்த செய்தியை ஆதரிக்க சில ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
ஆதாரங்களை வழங்குங்கள். அவ்வாறின்றி நீங்கள் அப்படி அனைத்துக்கும் மேல் இருந்து செய்திகளை உருவாக்க முடியாது. நான் சென்றிருந்தால், அந்தத் தகவல் எங்கிருந்து வந்தது?
நீங்கள் என்னைப் பார்த்தீர்களா?
ஏனென்றால், பிரதமராக, நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது.
நான் ரகசியமாக எங்கும் செல்லவும் முடியாது.
எனவே, நான் சென்றதை நிரூபிக்கவும். அவ்வாறு நான் கூறுவது பொய் என நிருபித்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
ranil court case again october bailled out 6882
மேலும் வாசிக்க :
விசேட செய்தி : ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்திற்கு யாழ் மாணவர்கள் ஆதரவு!
முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!
எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10
வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
திருமணத்திற்கு முன் இருபாலாருக்கும் கட்டாய முழு இரத்தப் பரிசோதனை!
கீரி சம்பா அரிசி பற்றாக்குறையா??? மாற்று அரிசி இறக்குமதி செய்யப்படுமா?
கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது
