Friday, August 29, 2025
HomeCinema Newsஎட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் - ரேட்டிங்: 8/10

எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10

rajnikanth coolie movie review in tamil 6708

நண்பனுக்காக பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ரஜினிகாந்த், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார்.

கதைக்களம்

நாயகன் ரஜினிகாந்த் சென்னையில் மேன்சன் நடத்தி வருகிறார். விசாகப்பட்டினத்தில் உள்ள இவரது நண்பர் சத்யராஜ் இறந்ததாக தகவல் அறிந்து அங்கு செல்கிறார்.

சென்ற இடத்தில் சத்யராஜ் இயற்கையாக சாகவில்லை என்றும் யாரோ ஒருவர் சத்யராஜை அடித்து கொலை செய்து இருப்பதாகவும் ரஜினி தெரிந்துக் கொள்கிறார்.

தன் நண்பனை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க நினைக்கிறார் கதையின் நாயகன்.

இறுதியில் சத்யராஜை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக செய்தார்கள்? அவர்களை ரஜினி பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ரஜினிகாந்த், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். நண்பனுக்காக பழிவாங்க துடிப்பது, கொன்றதுக்கான காரணத்தை தேடி அலைவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் நாகார்ஜுனா. இவரது உடை, நடை அனைத்தும் ரசிக்க வைக்கிறது. சௌபினின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

அடியாளாகவும், நல்லவன் போல் நடித்து வில்லனாகவும் அசத்தி இருக்கிறார். சத்யராஜ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது மகளாக வரும் ஸ்ருதி ஹாசன் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

சென்டிமென்ட் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். சார்லி, காளி வெங்கட், கண்ணா ரவி, லொள்ளு சபா மாறன், ரெபா மோனிகா, மோனிஷா பிளசி என அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

இயக்கம்

நண்பனுக்காக பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கும் திரைக்கதை போக போக வேகம் எடுக்கிறது. பல காட்சிகளில் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ் வைத்து ரசிக்க வைத்து இருக்கிறார்.

பல கதாபாத்திரங்களின் எண்ட்ரியும் அவர்களின் நடிப்பும் வியக்க வைக்கிறது. கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் படத்தில் இருக்கும் அனைத்தும் அம்சங்களும் வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்.

இசை

அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்து இருக்கிறது.

ஒளிப்பதிவு

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பல காட்சிகளில் பளிச்சிடுகிறது.

தயாரிப்பு

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

ரேட்டிங்: 8/10

மொத்தத்தில் கூலி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது!!!!!

மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ‘கூலி’ திரைப்படம் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

அதேபோல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் கூலி படத்தின் ரிலீசுக்கு எதிராக எந்த படமும் வெளியாகாத நிலையில், இந்தியில் ஹிருத்திக் ரோஷன் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 படம் வெளியாகியது.

இந்த படம் ஆந்திராவிலும் கூலிக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு சுந்திர தினத்தில் இரு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது பாக்ஸ்ஆபீஸில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் குறிப்பாக எக்ஸ் தளத்தில், ரசிகர்கள் தங்கள் கொண்டாட்டங்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

rajnikanth coolie movie review in tamil 6708

மேலும் வாசிக்க :

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!

சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசார​ணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular