Monday, February 10, 2025
HomeLocal Newsவடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலையிலும் மழை!

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலையிலும் மழை!

rain in the northern north central provinces and trincomalee 3068

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டத்துடன் கூடிய வானநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

rain in the northern north central provinces and trincomalee 3068
இதையும் படியுங்கள்

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!

தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!

பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!

பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்

மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!

வடக்கு கிழக்கில் ஓரளவு பலத்த மழை

வடக்கு கிழக்கில் ஓரளவு பலத்த மழை

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular