Monday, February 10, 2025
HomeMain newsவாகன இறக்குமதிக்கு கோட்டா முறை - அரசுக்கு புதிய யோசனை!

வாகன இறக்குமதிக்கு கோட்டா முறை – அரசுக்கு புதிய யோசனை!

Quota system vehicle imports new idea government 4010

வாகன இறக்குமதியாளர்கள் கடந்த காலங்களில் இறக்குமதி செய்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அவர்களுக்கு கோட்டாக்களை பெற்றுக்கொடுக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்துள்ளனர்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வாகன இறக்குமதிகள் இடம்பெறாமையின் காரணமாக, இதனூடாக மீண்டும் வாகன இறக்குமதி செய்வது பொருத்தமானதாக இருக்குமென்றும் ஏழு வருடங்கள் பழமையான ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்திருக்கிறார்கள்.

வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலத்துங்க இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்.

‘‘ஏழு வருடங்கள் பழமையான ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்திருக்கிறோம்.

விஜய் அரசியல் வருகை கடினமாக உள்ளது!

அலப்பறை அர்ச்சுனாவும் கண்டு கொள்ளாத அரசும்!

அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு!

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி!

ஜப்பான் போன்ற நாடுகளில் ஒரு வருடத்தில் ஒரு வாகனம் இறக்குமதி செய்வதற்கு செலவழிக்கும் பணத்தில் நான்கு வாகனங்களை கொள்வனவு செய்ய முடியும்.

அதன்போது எம்மால் செலவுகளை பாரியளவில் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

அவ்வாறு நான்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் போது வரியை குறைக்க வேண்டியதில்லை.

ஒருவருடத்துக்கு ஒரு வாகனத்தை இறக்குமதி செய்யும் போது அறவிடும் வரியை அவ்வாறே அறவிட வேண்டும்.

இவ்வாறென்றால், இதுபோன்ற நான்கு வாகனங்களுக்கான வரியை தனித்தனியாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

எனவே, சாதாரண விலையில் கார்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பையும் மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கலாம்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வாகன இறக்குமதியாளர்களால் வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாமல் போயுள்ளது.

அதன் காரணமாக கடந்த காலங்களில் வாகன இறக்குமதியாளர்களால் வாகன இறக்குமதி செய்துள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு கோட்டாக்களை பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்தார்.

Quota system vehicle imports new idea government 4010

இதையும் படியுங்கள்

கணவனை ஏமாற்றிய போலி மனைவி!

வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular