police attack woman cinematic style 5111
அண்மையில் பெரியநீலாவணை பொலிஸாரினால் அதே இடத்தில் வசிக்கும் பெண்மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சினிமா பாணியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் சபையில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பெரியநீலாவணையை சேர்ந்த றிலா என்னும் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் பொலிஸ் நிலையத்தை பூட்டிவிட்டு தகாத முறையில் பேசியதுடன், அவர்களை கடுமையாகத் தாக்கி, வன்புணர்வுக்கு உள்ளாக்குகின்ற முறையிலே அப்பெண்ணின் மார்பகங்கள், பின்புறம் ஆகியவற்றில் வன்முறையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
பொலிஸாரின் இச்செயலானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்றும், “கிளீன் ஶ்ரீலங்கா” என்று கூறுவது பொலிஸார் மேற்கொள்ளும் இப்படிப்பட்ட வன்மத்தனமான செயலையா என்றும் கேள்வி எழுப்பினாா்.
கறி பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்!
வில்பத்து கடற்பரப்பில் இறந்த டொல்பின்கள் – விசாரணை தீவிரம்!
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றுக்கு
இதற்குப்பதிளளித்த பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால, இவ்விடயம் சம்பந்தமாக விபரங்களைத் தருமாறு தங்களிடம் கேட்டிருந்தோம்.
தங்களால் கூறப்பட்ட விடயத்திற்கு அமைவாக உடன் விரைந்து இப்பிரச்சினையை அதிகாரிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறினார்.
அமைச்சர் இது பற்றி கோடீஸ்வரன் எம்.பியிடம் மேலும் கூறுகையில் நீங்களும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் “கிளீன் ஶ்ரீலங்கா” திட்டத்தை இதனுடன் சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம்.
அப்பிரச்சினைக்கான தீர்வை நான் நாளை உரிய நடவடிக்கையை மேற்கொண்டு நீதியை பெற்றுத்தருவதாக கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
police attack woman cinematic style 5111


இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு
