Pioneer Green Revolution Saudi Arabia protection 6572
பசுமை என்பது ஒரு தேசத்தின் எதிர்காலம் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டும் நாட்டாக இன்று சவூதி அரேபியா உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
Vision 2030 என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ், சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் Saudi Green Initiative (SGI) சுற்றுச்சூழல் திட்டம் எதிர்காலத்தில் அதீக நன்மைகளை பெற்றுத்தரக்கூடியதாகும்.
இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை 151 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் நட்டுப் பசுமையை பரப்பியுள்ளன. இது வெறும் மரநடுகை அல்ல. இது ஒரு உயிர்மூச்சாக, பசுமை எதிர்காலத்தின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
ஒரு வறண்ட நிலத்தில் இந்த அளவுக்கான பசுமை வளர்ப்பு என்பது சவூதி அரேபியாவின் அதீத நம்பிக்கையையும், தலைமைத்துவ திறமையையும் காட்டும் நேரடி சான்றாகும்.
மேலும், 500,000 ஹெக்டேர் நிலம் மீண்டும் உயிர்த்தெழச் செய்யப்பட்டுள்ளதுடன், காலநிலை மாற்றம், மணல் மற்றும் தூசி புயல்களுக்கு எதிரான 5 முக்கிய சுற்றுச்சூழல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கில் முதல் முறையாகவே நடைபெறுகின்ற பெரும் நிகழ்வாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் மிகவும் வியக்கத்தக்கது:
- பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பு 4.5% லிருந்து 18.1% ஆக உயர்வு.
- தேசிய பூங்காக்கள் 18 லிருந்து 500 ஆக அதிகரிப்பு.
- 2020 முதல் இன்று வரை 40,000+ சுற்றுச்சூழல் அனுமதிகள்.
- கடல் சூழலுக்காக 8,000+ உயிரினங்கள் மீண்டும் அறிமுகம்
இவை அனைத்தும் சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல் மீதான உண்மையான அக்கறையின் வெளிப்பாடுகளாக உள்ளன.
எண்ணெய் வளத்தில் மட்டுமே நம்பியிருந்த ஒரு நாட்டின் இப்படி ஒரு பசுமை மாற்றம், உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக அமைகிறது.
இளவரசர் முகம்மத் பின் சல்மானின் தலைமை வழிகாட்டுதலின் கீழ், சவூதி அரேபியா ஒரு புதிய பரிமாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுமையான பசுமை திட்டங்கள், மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்நாட்டின் முயற்சிகள், வருங்கால தலைமுறைகளுக்கே ஒரு பரிசாக அமையும்.
Pioneer Green Revolution Saudi Arabia protection 6572

மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
