Saturday, February 8, 2025
HomeLocal NewsPolitical Newsசி.ஐ.டியில் சிக்கினார் அர்ச்சுனா - சஜித்தை பழிவாங்க முயற்சி?

சி.ஐ.டியில் சிக்கினார் அர்ச்சுனா – சஜித்தை பழிவாங்க முயற்சி?

parliament staffs complaint against archunas behavior 3572

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்த ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அவதூறாக பேசி வௌியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

​தொடர்புடைய செய்தி >>>>>>

தமிழீழத்திலிருந்து சென்று சிறி லங்கா நாடாளுமன்றில் LIVE போட்ட ‘தமிழன்டா’ அர்ச்சுனா!!!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று (21) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.

நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து அர்ச்சுனாவிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என்று தெரிவித்த போதும் அவர் ஆசனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்.

மேலும் சுயேட்சையான வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு நடந்துகொண்ட விதம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்டது.

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!

பாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவித்தல்!

யாழ். மாவட்டத்திலிருந்து சுயேட்சைக்குழு இல.17ஐ பிரதிநிதித்துவப்படுத்தி 20487 வாக்குகளைப் பெற்று இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்திற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் குறித்து நேற்று மகாயுகம் இணைய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒழுக்கயீனமான செயற்பாடு தொடர்பில் சட்டரீதியாக முறைப்பாடு தெரிவிக்க முடியும் என்று சுட்டிக்காட்டியிருந்தோம்.

​தொடர்புடைய செய்தி >>>>>>

தமிழீழத்திலிருந்து சென்று சிறி லங்கா நாடாளுமன்றில் LIVE போட்ட ‘தமிழன்டா’ அர்ச்சுனா!!!

parliament staffs complaint against archunas behavior 3572

இதையும் படியுங்கள்

முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!

அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!

விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு!

மின்னணுத் திரை பாவனையால் குழந்தைகளுக்கு பார்வைக் குறைப்பாடு

மின்னணுத் திரை பாவனையால் குழந்தைகளுக்கு பார்வைக் குறைப்பாடு

IMF பிரதிநிதிகளின் விசேட கலந்துரையாடல்

IMF பிரதிநிதிகளின் விசேட கலந்துரையாடல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular