over 16000 people affected inclement weather 5475
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, ஐந்து மாகாணங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமத்திய மாகாணத்தில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 356 நபர்களும், வட மாகாணத்தில் 491 குடும்பங்களைச் சேர்ந்த 1,496 நபர்களும், கிழக்கு மாகாணத்தில் 5,086 குடும்பங்களைச் சேர்ந்த 14,806 நபர்களும், மத்திய மாகாணத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 33 நபர்களும், ஊவா மாகாணத்தில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 239 நபர்களும், மொத்தமாக 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.

சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் 98 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 77 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் எட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் மழைசற்று குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாகவும், இருந்த போதும் வடக்கு,கிழக்கு, வடமத்திய, ஊவா மாகணங்களிலும் சில பகுதிகளிலும், காலி,மாத்தறை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என காலநிலை அவதான மையத்தின் ஓய்வூநிலை அதிகாரி சூரியகுமார் தெரிவித்தார்.
over 16000 people affected inclement weather 5475


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

ரயில் ஈ-டிக்கெட் மாஃபியா குறித்து சிஐடி விசாரணை
