Friday, August 29, 2025
HomeSports Newsவரலாற்றில் முதன்முறையாக வடமாகாண விளையாட்டு போட்டிகளில் சாதனைகள்!

வரலாற்றில் முதன்முறையாக வடமாகாண விளையாட்டு போட்டிகளில் சாதனைகள்!

north province school sports meets held 6842

நடைபெற்று முடிந்த வடமாகாண விளையாட்டு விழா – 2025 இல் வரலாற்றில் முதல் தடவையாக மன்/கற்கிடந்தகுளம் றோ.க.த .கலவன் பாடசாலையினர் பெண்கள் பிரிவில் 86 புள்ளிகளை பெற்று வடமாகாணத்தில் 3ம் இடத்தினை பெற்றுள்ளார்கள்.

மன்னார் வலய பாடசாலைகளில் மொத்த புள்ளிகளில் 5ம் இடத்தினை பெற்றுள்ளனர்.

மேலும் 14 வயது பெண்கள் பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினையும் 12 வயது பெண்கள் பிரிவில் 26 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும் 16 வயது பெண்கள் பிரிவில் 28 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

14 வயது பிரிவில் A.மௌசிக்கா 80 M சட்டவேலி நிகழ்வில் கலந்து கொண்டு 15.00 செக்கன்களில் ஓடி முடித்து 1ம் இடத்தையும், 60M ஓட்ட நிகழ்வில் கலந்து கொண்டு 8.9 செக்கனில் ஓடிமுடித்து 4ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

18 வயது பிரிவில் J.சுபானு கோமஸ் Triple jump நிகழ்வில் கலந்து கொண்டு 9.87 M தூரம் பாய்ந்து 2ம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

12 வயது பிரிவில் R.றஸ்சிதா றாகவி 60 M நிகழ்வில் கலந்து கொண்டு 9.00 செக்கன்களில் ஓடி முடித்து 1ம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் வர்ண
சான்றிதழையும் பெற்றுகொண்டார்,மேலும் 100M ஓட்ட நிகழ்வில் கலந்து கொண்டு 15.01 செக்கனில் ஓடிமுடித்து 2ம் இடத்தினையும்,நீளம் பாய்தல் நிகழ்வில் கலந்து கொண்டு 4.13 M தூரம் பாய்ந்து 2ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

16 வயது பெண்கள் பிரிவில் T.M.டென்சிகா 400 M ஓட்ட நிகழ்வில் கலந்து கொண்டு 1.05.0 செக்கன்களில் ஓடி முடித்து 3ம் இடத்தையும்,300M சட்டவேலி நிகழ்வில் கலந்து கொண்டு 50.1 செக்கனில் ஓடிமுடித்து 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

16 வயது பிரிவில் S.கிரகோறியா 400 M போட்டியில் கலந்து கொண்டு 1.04.34 செக்கன்களில் ஓடி முடித்து 2ம் இடத்தையும், நீளம் பாய்தல் நிகழ்வில் கலந்து கொண்டு 4.91 M தூரம் பாய்ந்து 2ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

14 வயது பிரிவில் S.இமல்டா மேரி, A.மௌசிகா,J.நியூசியா, E.மெக்கன்சி ஆகியோர் 4*100 M அஞ்சலோட்ட நிகழ்வில் கலந்து கொண்டு 58.9 செக்கன்களில் ஓடி முடித்து 1ம் இடத்தை பெற்றுக்கொண்டார்கள்.

north province school sports meets held 6842

மேலும் வாசிக்க :

விசேட செய்தி : ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்திற்கு யாழ் மாணவர்கள் ஆதரவு!

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!

உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!

எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10

வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!

இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!

திருமணத்திற்கு முன் இருபாலாருக்கும் கட்டாய முழு இரத்தப் பரிசோதனை!

கீரி சம்பா அரிசி பற்றாக்குறையா??? மாற்று அரிசி இறக்குமதி செய்யப்படுமா?

கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular