Friday, August 29, 2025
HomeSports News2027 சர்வதேச கிண்ண தொடர் - கிரிக்கெட் சபையின் புதிய அறிவிப்பு

2027 சர்வதேச கிண்ண தொடர் – கிரிக்கெட் சபையின் புதிய அறிவிப்பு

New report Cricket Board 2027 ICC World Cup 6898

2027 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் சர்வதேச கிண்ண கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறும் எனச் சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, 24 வருடங்களின் பின்னர் இடம்பெறவுள்ள குறித்த உலகக்கிண்ண தொடரில் 44 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவிலும் மிகுதி 10 போட்டிகள் நபீமியா மற்றும் சிம்பாபே ஆகிய ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறவுள்ளன.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவினால் ஒரு நாள் சர்வதேச கிண்ணத் தொடர் நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மீண்டும் 24 வருடங்களுக்குப் பின்னர் அங்கு சர்வதேச ஒருநாள் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அவுஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ”சிறப்பான நாளில் ஒரு சிறப்பான தொடக்கம். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு தொடக்கத்தை கொண்டிருக்கும்.

ஐ.பி.எல் வீரராக எனது நேரம் முடிவுக்கு வருகிறது. ஆனால், பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரம் தொடங்கியுள்ளது.

அனைத்து அழகான நினைவுகள் மற்றும் எனக்கு வாய்ப்பளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் ஐ.பி.எல் நிர்வாகங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

New report Cricket Board 2027 ICC World Cup 6898

மேலும் வாசிக்க :

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்திற்கு யாழ் மாணவர்கள் ஆதரவு!

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!

உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!

எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10

வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!

இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular