new prime minister france emmanuel macron 7135
பிரான்ஸில் 48 மணிநேரத்தில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களுக்கு எதிர்கட்சிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட செபஸ்டியன் லெகோர்னு கடந்த திங்கட்கிழமை (6) தனது பதவியில் இருந்து விலகினார்.
இலங்கை அரசாங்கம் ஏன் வாக்கெடுப்பை கோரவில்லை – நாமல் குற்றச்சாட்டு
நடிகை ஒருவரிடம் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கோரிய சீமான்!
இதனைத் தொடர்ந்து வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவும், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் விரைவில் புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுக்கு உள்ளது.
இதற்கிடையே பெரும்பான்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.
இந்த சூழ்நிலையிலேயே புதிய பிரதமரை 48 மணிநேரத்தில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
தீவிர சைவரான இலங்கை வைத்தியருக்கு அசைவ உணவு கொடுத்ததால் மரணம்: கட்டார் எயார்வேஸ் மீது வழக்கு
பறவை மோதி சேதமடைந்த விமானம் – இலங்கையிலிருந்து சென்னை வரை சென்றதால் அதிர்ச்சி!
new prime minister france emmanuel macron 7135