New feature allow chat with people WhatsApp 6598
Whatsapp செயலி இல்லாதவர்களுடனும் உரையாடக் கூடிய வகையில் புதிய அம்சம் நடைமுறைக்கு வரவுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் வாட்சப் செயலி பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிதாக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதேபோன்று, தற்போது வாட்சப் செயலியை பயன்படுத்தாதவர்களுடனும் உரையாடும் வகையில் விருந்தினர் அரட்டை (Guest Chat) என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சத்தில், வாட்சப் செயலியை பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி அழைப்பு விடுக்க முடியும்.
இந்த லிங்க்கை, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது சமூகவலைத்தளங்கள் மூலம் அனுப்ப முடியும்.
இந்த லிங்கை கிளிக் செய்தால், பிரௌசரில் தற்காலிக பக்கம் ஒன்று திறக்கும். அதில் வாட்சப் செயலியை டவுன்லோட் செய்யாமலே உரையாட முடியும்.
ஆனால், இதில் புகைப்படம், வீடியோ, குரல்பதிவு உள்ளிட்ட எந்த கோப்புகளையும் அனுப்ப முடியாது. மேலும், குரல் அல்லது வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.
இந்த உரையாடல் end-to-end encryption செய்யப்பட்டுள்ளதால், இதனை வேறு யாரும் அணுக முடியாது.
தற்போது இந்த அம்சம் (Beta) உருவாக்கத்தில் உள்ள நிலையில், எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
New feature allow chat with people WhatsApp 6598

மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
