Friday, August 29, 2025
HomeLocal Newsசுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பு வேண்டும் - சுரேஸ் பிறேமச்சந்திரன்!

சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பு வேண்டும் – சுரேஸ் பிறேமச்சந்திரன்!

need constitution allows live autonomy suresh 4914

வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும் எனவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று (05) இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரண்டு தடவை இணைய வழி ஊடாக பேசியுள்ளோம்.

இன்றைய (நேற்றைய -05) கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேசினோம்.

அத்துடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை கிராம மட்டங்களில் பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும்.

அத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் பேசி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ் கட்சிகளுடன் இது தொடர்பில் பேசுவதாகவும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி முதலாவது வாரத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் மாநாட்டை வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளோம்.

அதற்கு முன்னதாக மாவட்ட நிறைவேற்றுக் குழுக்கள் கூடி என்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் எனவும் தீர்மானிப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டி தேவையும் பொறுப்பும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இருக்கிறது.

need constitution allows live autonomy suresh 4914

இதையும் படியுங்கள்

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!

வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!

உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் – ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை!

மற்றொரு பரீட்சையின் வினாத்தாளும் கசிவு

மற்றொரு பரீட்சையின் வினாத்தாளும் கசிவு

ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பு தேவை

ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பு தேவை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular