mullaitheevu woman exposes true face diaspora 5469
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் (UNHRC) காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளைத் தலைவி லீலாதேவி ஆனந்த நடராஜா என்பவர் புலம்பெயர்ந்த நாடுகளில் செயற்பட்டு வரும் ஜெனீவா மாஃபியாக்கள் குறித்து மாறுபட்ட கருத்தை வௌியிட்டுள்ளார்.
அதற்கு முன்னர் யார் இந்த ஜெனீவா மாஃபியாக்கள் என்பது குறித்து பார்த்துவிட்டு வருவோம் >>>>>>
பிரபல இணைய ஊடகமொன்று இதுகுறித்த கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.
புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களிடம் ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்’ என்று கேட்டால், ‘பொறியியலாளராகப் பணியாற்றுகிறேன்’, ‘வியாபாராம் செய்கிறேன்’, ‘ரெஸ்டோரன்டில் வேலை செய்கிறேன்’ என்று ஏதாவது ஒரு வேலையைக் குறிப்பிடுவார்கள்.
‘ஜெனிவா வேலைத்திட்டம் செய்கின்றேன்’ என்று கூறிக்கொண்டும் புலம்பெயர் நாடுகளில் ஒரு கூட்டம் அலைந்து திரிகின்றது.
இவர்கள் வேறு எந்த வேலையும் செய்வது கிடையாது.
இவர்களுடைய முழுநேரப் பணியே ஜெனிவாவை மையப்படுத்திய பணிகள்தான்.
உடனடியாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது இவர்கள் ஜெனிவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் ஏதோ பெரிய வேலை செய்வதாக.
அவர்களது முழு நேரவேலை என்னவென்றால், தமிழ் மக்களின் அவலங்களை ஜெனிவாவில் வியாபாரமாக்கிப் பணம் சம்பாதிப்பது மாத்திரம்தான்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அவலங்களை ஜெனிவாவில் பேசுவது, அதற்கு ஆதாரமாக இலங்கையில் காணாமல் போனவர்களின் உறவுகளை அழைத்து ஜெனிவாவில் அவர்களைப் பேசவைப்பதுதான்.
பின்னர் தமிழ் ஊடகங்களில் செவ்வி வழங்குவது இவைகள்தான் இந்த ஜெனிவா வேலைத்திட்டம் என்று கூறித்திரிகின்ற பிரமுகர்களின் பிரதான செயற்திட்டம்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்று தன்னைக் கூறிக்கொண்டு திரிகின்ற ஒருவர் கடந்த 30 வருடங்களாக வேலைகள் எதுவுமே செய்யவில்லை.
30 வருடங்கள் ஜெனிவாவில் பேசி எதையாவது தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தந்தாரா என்றால் அதுவும் இல்லை.
யுத்தம்தான் முடிவடைந்துவிட்டதே இனியாவது ஏதாவது செய்து பிழைப்பாரா என்றால் அதுவும் இல்லை.
புலம்பெயர் தமிழர்களிடம் காசுசேர்ப்பதற்கு இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக வதந்திபரப்பிக்கொண்டு வேறு ஒரு துருப்புச் சீட்டைக் கரங்களில் எடுத்துச் சுற்றித்திரிகின்றார்.
இது இவ்வாறு இருக்க, ஜெனிவா வேலைத் திட்டம் என்று கூறித்திரிகின்ற சிலர் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டுவருவது வெளித்தெரியவந்து, தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிவருகின்றது.
ஜெனிவாவில் பேசுவதற்காகவென்று கூறி வீசாக்களைப் பெற்று பலரையும் சுவிட்சலாந்துக்கு அழைத்துச் சென்று, சுவிட்சலாந்தில் வைத்து அவர்களில் சிலரை தங்கவைத்து விடுவார்கள்- பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டு.
இதுவும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி, சில ஜெனிவா செயற்திட்ட வீரர்கள் சுவிஸ் வருவதற்குத் தடைவிதிக்கப்பட்ட கேவலமும் நடந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெனிவா செயற்திட்ட வீரரொருவர் சுவிஸ் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இந்தநிலையில், நேற்றைய தினம் மற்றொரு நகைப்புக்கிடமான சம்பவம் ஜெனிவாவில் நடந்துள்ளது.
இறுதி யுத்தத்தின் போது காணாமல்போன ஒருவரின் மனைவி என்று கூறிக்கொண்டு ஜெனிவா வந்திருந்த ஒரு பெண், அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைத் தலைவியே இப்படி தப்பியோடியவர் என்று கூறுப்படுகின்றது.
இலங்கை பொலிஸார் தன்னைத் தேடுவதாக ஏற்கனவே செய்திகளைக் கசியவைத்ததுடன், அவர் ஜெனிவாவில் நின்றபோது ஆட்களை ஏற்பாடு செய்து கொழும்பில் இருந்து தொலைபேசி அழைப்புக்களை எடுக்கும்படி செய்து, அகதி அந்தஸ்து கோருவதற்கான ஆதாரங்களை அவர் திரட்டியதாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் அவர் மாறாக யுத்தத்தால் தமிழர் தரப்பு மாத்திரமன்றி சிங்கள தரப்பினரும் பரஸ்பரம் பாதிக்கப்பட்டதாக கூறி சர்ச்சையை கிளப்பிய விடயம் தற்போது புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசிக்கலில் முன்னாள் அமைச்சர்கள் – சி.ஐ.டி மற்றும் நீதிமன்றில் முன்னிலை!
பிரபாகரனுடன் சீமான் போலி புகைப்படம் – நான்தான் எடிட் செய்தேன் – இயக்குநர் ராஜ்குமார்!
மூடப்பட்ட வீதிகள் மற்றும் வௌ்ள அபாயம் உள்ள பகுதிகள் பற்றிய அறிவிப்பு!
அவர் தங்களின் விடுதலைப் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார் என புலம்பெயர் மாபியாக்கள் தற்போது சர்வதேச அளவில் செய்வதறியாது புலம்பி வருகின்றனர்.
இதன் காரணமாக தாங்கள் இதுவரை காலமும் கட்டிக் காத்து வந்த பிம்பத்தை லீலா தேவி நீர்த்துப் போகச் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இலங்கையில் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களுக்கு வாழ்வதற்கான சிறந்த சூழல் இல்லை என்றும் மேற்குலக நாடுகளில் ஏதிலிகளாக தஞ்சம் புகுந்த மாபியாக்கள் அங்கு கிடைக்கும் சுக போகங்களை விட்டகல முடியாத நிலையில், புலம்பி வருகின்றனர்.
கடந்த கால அரசாங்கங்களின் கெடுபிடிகளை காரணம் காட்டி வௌியேறிவர்கள் புதிய அரசாங்கத்திலும் அவ்வாறான பிக்கல் பிடுங்கல்கள் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கவே முனைந்து வருகின்றார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஜெனிவா செயற்திட்ட மாபியாக்களின் தொல்லை பொறுக்க முடியாமல் இம்முறை சுவிஸ் அரசாங்கமே இந்தப் பெண்களை ஜெனிவாவுக்கு அழைத்து வந்திருந்தார்கள் என்பதுதான்.
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் என்பது இலங்கை அரசாங்கத்தால் கடத்தப்பட்டதாகவும், அப்படி கடத்தப்பட்டவர்கள் இன்னும் வீடு திரும்பாத காரணத்தினால் காணாமல் போனவர்களின் உறவுகளால் உருவாக்கப்பட்டது.
இந்த சங்கத்திற்காக பாடுபடுகிறோம் என்று காட்டி கொள்பவர்களிடம் ஒரு கேள்வி?
இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் தரப்பினருக்காக குரல் கொடுக்க காணாமல் ஆக்கபட்டோர் சங்கம் அமைத்து ஜெனிவாவில் பேசுகிறீர்கள்.
ஆனால் அதே விதத்தில் அப்பாவி தமிழர்கள் பலரை விடுதலைப்புலிகள் அமைப்பும் அழைத்து சென்றார்கள்.
அப்படிக் கடத்தப்பட்டவர்களுக்கு இன்றுவரை என்ன ஆனது என்று தெரியாமல் பல குடும்பங்கள் துயரப்படுகின்றனா்.
அவர்கள் யாரிடம் நீதி கேட்பது.
அரசாங்க தரப்பு இராணுவத்தினரால் கடத்தப்பட்டவா்களுக்கு மட்டுமா அநீதி இழைக்கப்பட்டது?
விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?
அதற்கும் ஜெனிவா பதில் கூறுமா? இல்லை இந்த ஜெனிவா செயற்திட்ட மாபியாக்களின் பதில் என்ன?
எம்மில் ஒருசிலர் செய்கின்ற இதுபோன்ற காரியங்கள் உண்மையான இழப்புகளுடன் நின்று தவிக்கின்ற மக்களையும், மனித உரிமை விடயங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற சில செயற்பாட்டாளர்களையும் எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை உணர்ந்துகொள்ளாதவரை, தமிழர்களுக்கு இலங்கையில் மாத்திரமல்ல எங்குமே விடிவு கிடைக்காது.
mullaitheevu woman exposes true face diaspora 5469



இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

ரயில் ஈ-டிக்கெட் மாஃபியா குறித்து சிஐடி விசாரணை
