mp archuna gets into trouble with police 5498
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் இன்று அதிகாலை நடந்த கருத்து மோதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
குறித்த சம்பவம் அனுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய (21) சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது சொந்த வாகனத்தில் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
சட்டசிக்கலில் முன்னாள் அமைச்சர்கள் – சி.ஐ.டி மற்றும் நீதிமன்றில் முன்னிலை!
பிரபாகரனுடன் சீமான் போலி புகைப்படம் – நான்தான் எடிட் செய்தேன் – இயக்குநர் ராஜ்குமார்!
மூடப்பட்ட வீதிகள் மற்றும் வௌ்ள அபாயம் உள்ள பகுதிகள் பற்றிய அறிவிப்பு!
இதன்போது, விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரினர்.
இவ்வாறான விடயங்களில் பொலிஸாரின் தௌிவின்மையே காரணம் என்பது புலனாகின்றது.

“நான் நாடாளுமன்றத்திற்குப் போகிறேன்.” என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த பின்னரும் பொலிஸ் அதிகாரிகள் அவருடைய ஆவணங்களை தொடர்ச்சியாக கோரியதுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
mp archuna gets into trouble with police 5498


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறப்பு

108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது
