mountlavinia shooting 4 suspects arrested 5318
கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதிப் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று (15) மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற நபரும், அதை அகற்ற உதவிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரமற்ற மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் குறித்து விசாரணை!
மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் – 2025
கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு!
மேலும், குற்றவாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ஜெக்கெட்டுகளை களுபோவில, போதிவத்வ பகுதிக்கு எடுத்துச் சென்ற நபர் மற்றும், டிசம்பர் 28 முதல் ஜனவரி 05 வரை அந்த பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ஜெக்கெட்டுகளை வைத்திருந்து, ஜனவரி 05 ஆம் திகதி இரவு கொட்டாவை-பிலியந்தலை 255 வீதியில் உள்ள பாழடைந்த இடத்திற்கு கொண்டு சென்று குற்றத்திற்கு துணை போன நபரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்
கைது செய்யப்பட்ட 28, 27, 21 மற்றும் 17 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் வெள்ளவத்தை, பொரளை மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
mountlavinia shooting 4 suspects arrested 5318


இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – 4 சந்தேகநபர்கள் கைது

மான், மரை கொம்புகளுடன் ஒருவர் கைது
