Money laundering case Arun Thambimuthu 6974
அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பணத்தினை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி மோசடி செய்தமைக்காக பணம் வழங்கிய புலம்பெயர் தமிழர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்றைய தினம் (12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு நீதவான் தர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் பத்தாம் மாதம் ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீடுகளை செய்ய முனையும் புலம்பெயர் தமிழர்களை இவ்வாறு ஏமாற்றி மோசடி செய்வது எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களை அச்சமடைய செய்யும் என குறித்த வழக்கினை தாக்கல் செய்த புலம்பெயர் தொழிலதிபரான கிறிஸ்டி குணரெட்னம் தெரிவித்தார்.
Money laundering case Arun Thambimuthu 6974
மேலும் செய்திகள் >>>
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை!
இந்திய மாணவர்களுக்கு 80% வீசா நிராகரிப்பு!
புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!