Sunday, February 16, 2025
HomeForeign Newsவிமான விபத்தில் பலர் மாயம்! 12 சடலங்கள் மீட்பு!

விமான விபத்தில் பலர் மாயம்! 12 சடலங்கள் மீட்பு!

missing plane crash 12bodies recovered 5692

64 பேருடன் சென்ற அமெரிக்க பயணிகள் விமானம், ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் ஒரு இராணுவ உலுங்கு வானூர்தியுடன் மோதி போடோமாக் நதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த நிலையில், மீட்புக் குழுக்கள் இதுவரை நதியில் இருந்து சுமார் 18 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, உறைபனி நிலையில் தீயணைப்பு படகுகளும் சுழியோடிகளும் (Divers) தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் (American Airlines) ஒன்று அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) உலங்குவானுர்தி உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சிறு வயதில் கர்ப்பம் தரித்தல் அதிகரிப்பு!

சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு!

அர்ச்சுனா எம்.பி கைது!

இலங்கையில் அறிமுகமாகும் புதிய மென்பொருள் – கைத்தொலைபேசி பாவனையாளர்கள் கவனம்!

இந்த விபத்து நேற்று (30.1.2025) உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் நிகழ்ந்ததாக விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தையடுத்து ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானம் – PSA ஏர்லைன்ஸ் பொம்பார்டியர் CRJ700 – ஜெட் விமானத்தில் 65 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது

இந்த விமானம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வணிகப் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு கன்சாஸிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்று கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீகன் வாஷிங்டன் (Reagan National Airport) தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி வந்துகொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போடோமேக் நதிக்கு அருகில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் சிறிய விமானம் கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது என்று கொலம்பியா தீயணைப்பு மற்றும் அவசர மருத்து சேவைகள் துறை தெரிவித்துள்ளது

இதையடுத்து, வாசிங்டன் டிசியின் அவசர சேவை பிரிவினர், ரீகன் தேசிய விமான நிலையத்துக்கு திரண்டுள்ளனர்.

10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

missing plane crash 12bodies recovered 5692

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

பிரியந்த மாயாதுன்னேவின் கைதுக்கான காரணம் வௌியானது

பிரியந்த மாயாதுன்னேவின் கைதுக்கான காரணம் வௌியானது

நுவரெலியாவில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நுவரெலியாவில் மண்சரிவு அபாய எச்சரிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular