missing people protest in north and east 6943
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி நோக்கி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து இந்தப் பேரணி ஆரம்பமாகியது.
உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வட கிழக்கில் இன்றைய தினம் போராட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.