missing people protest in north and east 6885
எதிர்வரும் 30-08-2025ம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கதினரால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும்
இப்போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு வலுச்சேர்க்க வேண்டும் என்பதையும்
தானும் தவறாமல் இந்த போராட்டத்தில் கலத்துகொள்வதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதியை கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து செம்மணி வரையும் கிழக்கில் பழைய கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்காவரையும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
இப்போராட்டம் தொடர்பாக நேற்று (26) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் முல்லைதீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரதும் ஆதரவையும் வேண்டி நிற்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே, நாங்கள் சர்வதேச நீதியைத் தான் விரும்புகின்றோம் ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் செயலாளர் சசிகுமார் ரஞ்சினிதேவி வேண்டுகோல் விடுத்துள்ளார்.
missing people protest in north and east 6885
மேலும் வாசிக்க :
விசேட செய்தி : ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்திற்கு யாழ் மாணவர்கள் ஆதரவு!
முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!
எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10
வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!