mastan supporters attack rishad supporters 3115
மஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல், தலைதெறிக்க ஓடிய றிசாட் பதியுதீன் தொண்டர்கள் நேற்றுமாலை 8 மணியளவில் காதர்மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச்சென்றிருந்தனர்.
சற்றுநேரத்தில் குறித்த மோட்டார்சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள்அமைச்சர் றிசாட்பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத்தொடரணிகள் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதானவீதிக்கு வந்தது. இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் சற்றுநேரத்தில் அது கலவரமாகியது.
கலவரத்தில் றிசாட் பதியூதீனின் வாகனத்தொடரணி அடித்து நொறுக்கப்பட்டது. அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் முற்றுமுழுதாக அடித்து நொறுக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்தபகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதேவேளை இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலவரநிலமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் பொலிசாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றது.
mastan supporters attack rishad supporters 3115
இதையும் படியுங்கள்
புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!
4 நாட்களில் கோட் வசூலை முந்திய அமரன்!
சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!
தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!
பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!
பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்
மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!
அரிசி விற்பனை 50வீதம் வரை குறைந்துள்ளது!
கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர தேர்தல் பிரசாரம்!
தயார் நிலையில் பொலிஸார்!

வெப்ப அலையால் பொருளாதார பாதிப்பு: தமிழ்நாடு திட்ட ஆணைய அறிக்கையும் விவசாயிகள், கிக் பணியாளர் நிலையும்

[…] […]