Marxist Communist India urges Comrade Anura 5126
இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)- சி பி எம்- இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இந்தியா முழுவதும் ஆதரவாளர்கள் நிரம்பியுள்ள சி பி எம் கட்சிக்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் பல மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர்கள் உள்ளனர்.
சி பி எம் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு கடந்த வாரத்தின் இறுதியில் (ஜனவரி 3-5) தமிழ் நாட்டின் வட மாவட்டமான விழுப்புரத்தில் நடைபெற்றது.
அந்த மாநாட்டில் இயற்றப்பட்ட பல தீர்மானங்களில் ஒன்று, இலங்கையிலுள்ள தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் சமத்துவதுடன் வாழவும், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் இலங்கை மக்கள் கோரிக்கை!
2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்!
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை!
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
மாநாட்டின் ஆறாவது தீர்மானம் இலங்கையிலுள்ள தமிழர்களின் அவல நிலை பற்றி பேசுகிறது.
மேலும் அவர்களுக்கு நியாயம் வழங்க இலங்கை அரசாங்கத்தை கோருகிறது.
”இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துமின்மைக்கும், நீண்ட காலமாக இன வெறி தாக்குதலுக்கும் ஆளாகி வந்த நிலையில், அது உள்நாட்டு யுத்தத்திற்குமை, அமைதி இன்மைக்கும் வழி வகுத்தது. அதனால் அனைத்து பகுதி மக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர்”.
தற்போது தமது ’சக தோழரான’ அனுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ள நிலையில், சமத்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்படுத்த மாநாடு கோரியுள்ளது.
”தற்போது இலங்கைத் தமிழர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்ற தேசிய மக்கள் சக்தி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது.
இச்சுமூகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சமத்துவத்தையும் மாகாணங்களுக்கான அதிகார பரவலையும் உறுதி செய்ய வேண்டுமென இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது”.
மேலும் மாகாண சபைகளுக்கு விரைவாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அவற்றை விரைவாக நடத்தி அனைத்து மாகாண சபைகளுக்கும் உரிய அதிகாரங்கள் வழங்குவதன் ஊடாக, தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு முன் வர வேண்டும் எனவும் அந்த மாநாட்டின் தீர்மானம் கோரியுள்ளது.
இலங்கையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசும், அதன் தலைவரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற்று, அவர்களுக்கு உரிமைகளை அளிக்கும் தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் சி பி எம் அந்த தீர்மானத்தில் கேட்டுள்ளது.
”இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் உரிய கருத்துப் பரிமாற்றங்களை நடத்தி தீர்வுகளை உருவாக்க வேண்டும்.
மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கத்தின் போது எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்காது, கல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல்துறை போன்ற அம்சங்களில் மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது”.
இவ்வகையில் இலங்கையிலுள்ள சிறுபான்மையினருக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் அவர்களுக்கான கண்ணியம் மற்றும் சமத்துவம் குறித்து இயற்றப்பட்ட தீர்மானத்தை மதுரை மாநகரின் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் முன்மொழிய, தமிழக சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை வழிமொழிந்தார்.
இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான லோக் சபாவின் சி பி எம் கட்சிக்கு நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் நாடாளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவில் அக்கட்சிக்கு ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.
இதற்கு அப்பாற்பட்டு பல மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு சி பி எம் கட்சி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தென் இந்திய மாநிலமான கேரளாவில் சி பி எம் தலைமையிலான இடதுசாரி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மக்கள் ஜனநாயகம், தேச பக்தர்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோரின் புரட்சிகர ஒற்றுமை மூலம் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்கு உறுதி பூண்டுள்ளதாக அதன் அதிகார இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமது கட்சியின் அடித்தளம் உழைப்பாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டணியே என்றும் அக்கட்சி கூறுகிறது.
இதற்கு அப்பாற்பட்டு அக்கட்சியின் அடிப்படை கொள்கைகளில் பணியாற்றும் உரிமை, தொழிலாளர்களை ஒன்று திரட்டி கூட்டு பேரம் பேசுதல் மற்றும் வேலை நிறுத்தம் ஆகியவையும் முழுமையான மனித உரிமைகள் ஆகியவை உட்பட பல அம்சங்கள் அடிப்படை விழுமியங்களாக கூறப்பட்டுள்ளன.
“ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (என்பிபி) தலைவரான அனுர திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது கருத்து தெரிவித்த சி பி எம் கட்சி ‘’இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு இடதுசாரி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு வரலாற்று நிகழ்வு” என்று வாழ்த்தியது.
“சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாட்டை சமூக பொருளாதார அபிவிருத்தி, முன்னேற்றம் மற்றும் நலன்புரி பாதையில் இட்டுச் செல்வார் என நாங்கள் நம்புகிறோம்.
அவரது முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என்று தனது வாழ்த்தில் அக்கட்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Marxist Communist India urges Comrade Anura 5126


இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு
