Friday, August 29, 2025
HomeTop Storyவங்கிக்கடனின் புத்தகப்பை - நீதிமன்றில் வாய்தா வாங்கிய அரசியல் தலைவர்கள்!

வங்கிக்கடனின் புத்தகப்பை – நீதிமன்றில் வாய்தா வாங்கிய அரசியல் தலைவர்கள்!

many sri lankan politicians attended to courts 6925

ஊவா மாகாண சபையின் பெயரில் அரச வங்கிகளில் வைத்திருந்த ஆறு நிலையான கணக்குகளை முதிர்ச்சிக்கு முன்னர் மீளப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 1.73 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த இரண்டு முறைப்பாடுகளை ஜனவரி 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு தலைமை நீதவான் இன்று (29) உத்தரவிட்டுள்ளர்.

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலையான பிறகு, ஆவணங்கள் தொடர்பான பகுப்பாய்வாளர் அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆவணங்களை வரவழைக்க நினைவூட்டல் அனுப்ப உத்தரவிட்ட தலைமை நீதவான், முறைப்பாட்டாளர்களின் விசாரணையை ஜனவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, ​​மாகாணத்தில் உள்ள பாலர் பாடசாலை குழந்தைகளுக்கு ஒரு புத்தக பையை வழங்க வங்கியிடம் நிதியுதவி கோரியதன் அடிப்படையில், இந்த ஆறு கணக்குகளையும் வேண்டுமென்றே மூடி, இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரிவு 70 இன் கீழ் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்து இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

இதனிடையே, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றமே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபரை செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.

இதற்கிடையில் ராஜிதவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திருத்தி ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (28) தீர்மானித்தது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

many sri lankan politicians attended to courts 6925

More News From Mahayugam >>>

கச்சதீவு விவகாரம் -தமிழக மீனவர்களை விஜய் ஏமாற்றுகிறார்

செம்மணி மனிதப் புதைகுழி – 177 எலும்புக்கூடுகள் அடையாளம்!

இலங்கை வரலாற்றில் பதிவான சவால் மிக்க பொலிஸ் நடவடிக்கை – விசேட நீதிமன்றம் தயார்!

இந்திய நாடாளுமன்ற செயல்பாடுளை அறிந்துக்கொள்ள இலங்கை எம்.பிகள் பயணம்!

2027 சர்வதேச கிண்ண தொடர் – கிரிக்கெட் சபையின் புதிய அறிவிப்பு

இலங்கை வரலாற்றில் பதிவான சவால் மிக்க பொலிஸ் நடவடிக்கை – விசேட நீதிமன்றம் தயார்!

இந்திய நாடாளுமன்ற செயல்பாடுளை அறிந்துக்கொள்ள இலங்கை எம்.பிகள் பயணம்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular