mahinda rajapakshas ex security officer arrestd 7077
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது அவர் கைது செய்யப்பட்டார்.
விபரம் வௌியிடப்படாத சொத்துக்களை கையகப்படுத்தி வைத்திருப்பது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் அவர் அழைக்கப்பட்டிருந்தாாக கூறப்படுகிறது.
முன்னதாக அவர் 2016 ஆம் ஆண்டிலும் சொத்துக்களை அறிக்கையிடாமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தருணத்தில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
சொத்துக்களை அறிக்கையிடாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குகளிலிருந்தும் அவருக்கு பிணை வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய கட்டளையிட்டுள்ளார்.
குறித்த 5 வழக்குகளிலிருந்தும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த வழக்கு 2017 ஜனவரி மாம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையிலும் பாதுகாப்பு பிரதான அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் நெவிலின், அம்பாந்தோட்டை, மெதமுலனவிலுள்ள காணி ஒன்றில் கடந்த 2016 பெப்ரவரி 26 ஆம் திகதி அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
mahinda rajapakshas ex security officer arrestd 7077
மேலும் வாசிக்க >>>
விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு! (காணொளி)
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க அனுமதிக்க மாட்டேன் – டிரம்ப்
இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்பு
தேசிய விருதுகளை பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ்!