Sunday, February 16, 2025
HomeLocal NewsPolitical Newsவாடகை வீட்டிற்கு செல்லும் மகிந்த ராஜபக்‌ஷ குடும்பம்!

வாடகை வீட்டிற்கு செல்லும் மகிந்த ராஜபக்‌ஷ குடும்பம்!

Mahinda Moving Wijerama House To Rental House 5456

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பம் வாடகை வீட்டிற்கு குடிபெயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான முக்கிய தகவலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்த செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர்களது நண்பர்களிடமிருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரச்சினை தொடர்ந்து வருவதால், மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வன் நாமல் ராஜபக்ச, அங்கிருந்து வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அதற்கமைய, அங்கிருந்து வாடகை வீட்டிற்கு செல்வது பொருத்தமானது என நேற்று நாமல் தனது தந்தையிடம் பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கான வாடகை மாதத்திற்கு 4.6 மில்லியன் ரூபாய் வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mahinda Moving Wijerama House To Rental House 5456

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

இன்றும் பல ரயில்கள் சேவையில் இல்லை

இன்றும் பல ரயில்கள் சேவையில் இல்லை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular