Friday, August 29, 2025
HomeCrimeஇனிய பாரதியின் முக்கிய சகாவும், பிள்ளையானின் துப்பாக்கிதாரியும் கைது!

இனிய பாரதியின் முக்கிய சகாவும், பிள்ளையானின் துப்பாக்கிதாரியும் கைது!

Lanka Police Investigate pillayan iniyabarathi 6695

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளில் ஒருவருமான இனிய பாரதியின் முக்கிய சகா ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக இனிய பாரதி என்றழைக்கப்படும் கந்தையா புஷ்பராஜா தற்போதைக்கு குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இனிய பாரதி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவரது முக்கிய சகா ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர், இனிய பாரதி மேற்கொண்ட படுகொலைகளின் துப்பாக்கிதாரியாக இருந்துள்ளதுடன், பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

அதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் துப்பாக்கிதாரியான முகமட் ஷாகித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை, இன்று(13) குற்றப்புலனாய்வுத் துறையினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட முகமட் ஷாகித், கடந்த 2024 ஜுன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்து 3 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முகமட் ஷாகித், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Lanka Police Investigate pillayan iniyabarathi 6695

மேலும் வாசிக்க :

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!

சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசார​ணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular