landslide warning issued for kandy nuwaraeliya 2789
இலங்கையில் சில பிரதேச செயலகங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கை இன்று (08) மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, பசறை மற்றும் ஹாலி எல, கண்டி மாவட்டத்தில் பாததும்பர மற்றும் தும்பனை, கேகாலை மாவட்டத்தில் தெரணியகலை, தெஹியோவிட்ட, கலிகமுவ, ரம்புக்கனை, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல பகுதிகளுக்கும்.
கேகாலை, குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை, குருவிட்ட, மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
landslide warning issued for kandy nuwaraeliya 2789
