kuviyam cinema awards held on colombo foundation 6858
இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களின் படைப்புக்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் “குவியம் ஊடகமானது இலங்கை படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் திறமையாளர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றது.
இவ் விருது வழங்கும் விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொழும்பு 07, இலங்கை மன்றக் கல்லுாரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக குவியம் விருதுகள் நிறுவுனரும் இயக்குனருமான குவியம் மீடியா பிறைவேற் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குனர் கனகநாயகம் வரோதயன் தெரிவித்தார்.
இவ்விழாவை வழமையாக யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து வரும் குவியம் அமைப்பு இவ்வாண்டு இந்த விழாவை கொழும்பில் தினகரன், தினகரன் வாரமஞ்சரி, டெய்லி நிவ்ஸ் ஆகிய பத்திரிகைகளின் அனுசரணையுடன் நடத்தவுள்ளது. (இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேசிய பத்திரிகைகளை வௌியிடும் ஒரே ஒரு நிறுவனம் லேக் ஹவுஸ் நிறுவனமாகும்).
இதற்கமைய “குவியம் விருதுகள் 2025” இற்கான அறிவிப்புக்களை விடுத்திருந்தது. குறித்த காலப்பகுதியில் 200ற்கும் மேற்பட்ட படைப்பாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் இருந்து வெற்றியாளர்களைத் தெரிவு செய்து விருதுகள் வழங்கப்படவுள்ளன.
காணொளிப்பாடல்கள், குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் என பல பிரிவுகளின் கீழ் ஏறக்குறைய 50 விருதுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. (‘வாழ்நாள் சாதனையாளர் உட்பட சிறப்பு விருதுகளும் உண்டு)
சம காலத்தில் இலங்கையில் இடம்பெறும் ஒரேயொரு தமிழ் சினிமா விருது வழங்கும் விழா “குவியம் விருதுகள்” என்பதுடன், இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து தமிழ் சினிமா கலைஞர்கள். சினிமா விரும்பிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது வழங்களுடன் இடம்பெறும் கலை நிகழ்வுகளில் நம் நாட்டின் முன்னணி கலைஞர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

kuviyam cinema awards held on colombo foundation 6858
மேலும் வாசிக்க :
விசேட செய்தி : ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்திற்கு யாழ் மாணவர்கள் ஆதரவு!
முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!
எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10
வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
திருமணத்திற்கு முன் இருபாலாருக்கும் கட்டாய முழு இரத்தப் பரிசோதனை!
கீரி சம்பா அரிசி பற்றாக்குறையா??? மாற்று அரிசி இறக்குமதி செய்யப்படுமா?
கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது
