Friday, August 29, 2025
HomeLocal NewsPolitical Newsகாத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசார​ணைகள் - சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசார​ணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!

Kattankudy mosque investigations internationalized 6547

முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகளை சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் நேற்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி ஹுஸைனியா பள்ளிவாயலிலும், மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் நடந்த படுகொலைச் சம்பவங்களில் ஷஹீதாக்கப்பட்ட 103 ஷுஹதாக்கள் நினைவாக துஆப்பிரார்த்தனை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலாமா சபை மற்றும் ஊர் ஜமாஅதார்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

அத்துயர நினைவுகளை மீட்டிக்கொள்வதற்கும் ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இது வாய்த்ததையிட்டு பெருமகிழ்வுறுகிறோம்.

இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்களின் படிப்பினைகளை சரிவர உணர்ந்து இனங்களுக்கிடையிலான உறவை மீளக்கட்டியெழுப்புவதில் எமது கட்சியும், கட்சித்தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.

அத்திடசங்கட்பத்தை நாம் இந்த ஷுஹதாக்கள் நினைவு நாளில் உறுதி பூணுவது மாத்திரமல்லாமல், இத்துன்பியல் சம்பவங்கள் குறித்த வரலாற்றையும் சரிவர தொடர்ந்தும் மனதிலிருத்தி முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும் எனத்தெரிவித்தார்.

Kattankudy mosque investigations internationalized 6547

மேலும் வாசிக்க :

https://youtube.com/watch?v=MUM7wk7QOTA%3Ffeature%3Doembed
https://youtube.com/watch?v=AHN_ppwYFrM%3Ffeature%3Doembed

GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் பொலிஸார்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular