journalist lasantha murder urges justice 5020
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றன இப்போதாவது நீதியை நிலைநாட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்விவகாரத்தை அவரது மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துச் சென்றுள்ளார்
சிரச ஊடக வலையமைப்பின் மீதான கொடூரத் தாக்குதல் இடம்பெற்று 16 வருடங்கள் கடந்துள்ளன. லசந்த விக்கிரமதுங்க மற்றும் ராஜமகேந்திரன் ஆகியோர் நீதி மற்றும் நியாயத்திற்காக முன்நின்றார்கள்
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்றார்.
journalist lasantha murder urges justice 5020

இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க ஜப்பானின் ஆதரவு

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம்
