Thursday, July 31, 2025
HomeBusiness Newsஇலங்கை சுற்றுலா - கலாச்சார மேம்பாட்டிற்கு ரவி மோகன் ஆதரவு!

இலங்கை சுற்றுலா – கலாச்சார மேம்பாட்டிற்கு ரவி மோகன் ஆதரவு!

Jayam Ravi supports SriLankan tourism cultural 6381

பிரபல இந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவி மோகன், பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் ஆகியோர் இலங்கை வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று கொழும்பில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு இலங்கையின் சுற்றுலாத் துறைக்கும், கலாச்சார மேம்பாட்டிற்கும் புதிய பரிமாணங்களை வழங்கவல்ல முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் அழகான சுற்றுலாத் தலங்கள் மற்றும் செழுமையான கலாச்சாரம் ஆகியவற்றை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான திரைப்படத் தயாரிப்புகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இலங்கையின் இயற்கை எழிலையும், தனித்துவமான கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் திரைப்படங்களை தயாரிப்பதன் மூலம், உலகளாவிய பார்வையாளர்களை ஈர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையின் இசை மற்றும் கலாச்சார மரபுகளை வெளிப்படுத்தும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, நாட்டின் சுற்றுலா கவர்ச்சியை அதிகரிப்பது பற்றியும் பேசப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல்கள், இலங்கை சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கும் இந்திய திரையுலக பிரபலங்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jayam Ravi supports SriLankan tourism cultural 6381

மேலும் வாசிக்க :

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!

வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!

புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!

பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!

நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!

தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular