Saturday, February 8, 2025
HomeLocal Newsதமிழீழத்திலிருந்து சென்று சிறி லங்கா நாடாளுமன்றில் LIVE போட்ட 'தமிழன்டா' அர்ச்சுனா!!!

தமிழீழத்திலிருந்து சென்று சிறி லங்கா நாடாளுமன்றில் LIVE போட்ட ‘தமிழன்டா’ அர்ச்சுனா!!!

jaffna mp arjuna non sence at in parliament 3546

வயதானவர்களை விரட்டிவிட்டு பாலர் வகுப்பு குழந்தைகளை சேர்த்துக் கொண்டது போல் உள்ளது இன்றைய நாடாளுமன்றம்.

சபை நாகரீகம் தெரியாத படித்த முட்டாள்களை வடக்கு மக்கள் எப்படி தெரிவு செய்தார்கள் என்பதுதான் புரியாத புதிர்.

அறிவான, படிப்பறிவு மிக்க மக்களைக் கொண்டிருந்தது வடக்கு மாகாணம் தற்போது 20487 பகுத்தறிவில்லாத முட்டாள்களை கொண்டிருப்பது வெட்கக் கேடான விடயமாகும்.

ஒரு நாட்டின் உயரிய சட்டவாக்க ஸ்தானமாக கருதப்படும் நாடாளுமன்றத்திற்குள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

அரச ஊழியர்களிடம் எவ்வாறு மரியாதையாக நடந்து கொண்டு தமது மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவில்லாத முட்டாளை தெரிவு செய்த 20487 வாக்காளர்கள் இதன் மூலம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட ரீதியாக காணொளி பதிவு செய்வது குற்றமாகும்..

அது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயமாகும்.. நாடாளுமன்றத்தின் உட்பகுதியை தனிப்பட்ட ஒருவரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ பொது வௌியில் காண்பிப்பது குற்றமாக கருதப்படுகிறது.

அத்துடன் இந்த சம்பவம் குறித்து சபா நாயகருக்கு அறிவித்து பின்னர் முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு தொடர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது அரசியல் நோக்கத்திற்காக வேறு இடங்களில் காணொளி லைவ்-களை பதிவு செய்வது சாதாரண விடயமாக இருந்தாலும் நாட்டின் உயரிய இடத்தில் இவ்வாறு செய்வது பொது நாகரீகம் தெரியாத ஒருவரால் மாத்திரமே முடியும்.

தான் வைத்தியர் என்று மார்த்தட்டிக் கொண்டாலும்.. புத்தக படிப்பை மாத்திரம் படித்துவிட்டு சபை நாகரீகம் தெரியாமல் அலைகிறார்.

தமிழீழத்தில் இருந்து வந்திருப்பதாக தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் வைத்தியருக்கு தமிழருக்குரிய அடிப்படை பண்பு 95% இல்லை என்றுதான் கூற வேண்டும்.

தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திகொள்ளும் வைத்தியர் தமிழருக்குரிய பாரம்மபரிய உடையில் நாடாளுமன்றம் செல்லாமல் ஆங்கிலேயர் நாகரீகத்தில் உடை அணிந்து சென்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் டாக்டருடன் சுற்றித்திரியும் கௌசல்யா என்ற பெண் நாடாளுமன்றத்தை ஏதோ சுற்றுலா பூங்கா என்று நினைத்துக் கொண்டு தனது முத்தங்களை பறக்கவிடுகிறார்.

இந்த விடயங்களை வௌிக் கொண்டு வந்த பிரதான ஊடகங்களையும் தனது முகநூலில் திட்டித் தீர்த்திருக்கிறார்.

இதற்கு பரிந்து பேசும் சமூக வலைத்தள வாசிகள் வேறு… தமது பங்கிற்கு இவர்களை ஆதரிக்கிறார்களா? அல்லது கிரிஞ்சு பண்ணுகிறார்களா? என்பது தெரியவில்லை.

jaffna mp arjuna non sence at in parliament 3546

இதையும் படியுங்கள்

முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!

அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!

விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு!

மின்னணுத் திரை பாவனையால் குழந்தைகளுக்கு பார்வைக் குறைப்பாடு

மின்னணுத் திரை பாவனையால் குழந்தைகளுக்கு பார்வைக் குறைப்பாடு

IMF பிரதிநிதிகளின் விசேட கலந்துரையாடல்

IMF பிரதிநிதிகளின் விசேட கலந்துரையாடல்
RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular