Israel kills 21 Palestinians in Gaza since dawn 6721
காஸா நகரின் கிழக்கு பகுதியில் விமானங்கள் மூலம் தொடர்ந்து தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலியப் படை அங்குள்ள வீடுகளை தரைமட்டமாக்கி இருப்பதோடு புதிய தாக்குதல்களில் அங்கு 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்தப் பேச்சவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தயார் என்று ஹமாஸ் அமைப்பு மத்தியஸ்தர்களிடம் குறிப்பிட்டிருக்கும் நிலையிலேயே இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தூன் பகுதியில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேலிய படை நடத்திய செல் குண்டு வீச்சில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் ஷுஜையா புறநகர் பகுதிக்கு அருகே இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
காஸா நகரின் மூன்றாவது புறநகர் பகுதியான துபாவில் இடம்பெற்ற செல் தாக்குதல்களிலேயே எஞ்சிய இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Israel kills 21 Palestinians in Gaza since dawn 6721
மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
