Tuesday, October 14, 2025
HomeTop Storyவடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு - கனடாவில்!

வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு – கனடாவில்!

International Tamil Federation conference 6981

இலங்கையின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறவுள்ளதாக அனைத்துலகத் தமிழர் பேரவை தனது ஊடக அறிக்கையில் அறிவித்துள்ளது.

சர்வதேச மகாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 10ம்திகதி முதல் 12ம்திகதி வரை Toronto வில் நடைபெறவுள்ளது.

October 10th and 11th – University of Toronto, Scarborough Campus
October 12th – Scarborough Convention Centre ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

இந்த சர்வதேச கல்வியாளர் மாநாடு, உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களின் மொழி, கலாச்சாரம், கல்வி, சமூக முன்னேற்றம், அபிவிருத்தி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் முன்னேற்றகரமான வழிமுறைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் கருத்து வெளிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ளும் மிக முக்கியமான ஒரு தளமாக அமையவுள்ளது.

எமது தாயகத்தில் நிலையான பொருளாதார சமூக அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு முதலீட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள், ஆய்வுப் படிப்பை மேற்கொள்வோர் மற்றும் வடக்கு கிழக்கு தேசத்தின் மேம்பாடு போன்றவைக்கு உதவியளிக்கும்.

இந்த மகாநாடு தமிழர்களின் அறிவியல் பங்களிப்பு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையவுள்ளது.

உலகில் பல்வேறு நாடுகளில் பரந்து வாழும் தமிழ் அறிஞர்கள் பலரும் தமது ஆய்வுக் கட்டுரைகளை இந்த மாநட்டில் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இந்த ஆய்வுகள் எமது தாயகத்தின் முன்னேற்றத்தை மையப்படுத்தியதாக நிலைமையினை அறிவுபூர்வமாக அணுகுவதற்கான ஒருவாய்ப்பினையும் வழங்கும் என்று நாம் நம்புகின்றோம்.

இதன் மூலமாக வடக்கு கிழக்கின் முன்னேற்றத்திற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்த தெளிவினை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் இங்கு அடையாளப் படுத்தப்படும் சில தீர்வினை காணும் வகையிலான செயல் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் அனைத்துலகத் தமிழர் பேரவை தயாராக இருக்கின்றது.

இந்த மாநாடு குறித்த விடயங்களை conference.tamilfederation.org என்ற எமது இணையத்தளத்தில் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அனைத்துலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

International Tamil Federation conference 6981

மேலும் செய்திகள் >>>

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை!

இந்திய மாணவர்களுக்கு 80% வீசா நிராகரிப்பு!

புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular