indian primeminister modi coming srilanka 4981
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை அவர் நடத்திய சந்திப்பிலேயே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்திற்கான சரியான நேரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் சந்தோஷ் ஜா, கூறியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த போது, பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பை விடுத்திருந்தார். அதன் பிரகாரம் மோடியின் இலங்கை பயணம் இடம்பெற உள்ளது.
பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
indian primeminister modi coming srilanka 4981


இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!
புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தர பரீட்சைகள் ரத்து
