Friday, August 29, 2025
HomeIndian Newsகொழும்பு, கண்டி, யாழில் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 79 வது சுதந்திர தினம்!

கொழும்பு, கண்டி, யாழில் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 79 வது சுதந்திர தினம்!

indian independant day celebration sri lanka 6718

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இன்று (15) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் (இந்திய இல்லம்) உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றி, இந்திய தேசிய இராணுவத்தின் தியாகங்களை நினைவுகூர்ந்து கொழும்பிலுள்ள IPKF நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில், ஜனாதிபதியின் சுதந்திர தின முன்னோடி உரையின் பகுதிகளை உயர்ஸ்தானிகர் வாசித்தார்.

சுவாமி விவேகானந்தர் கலாசார மையத்தின் மாணவர்கள் தேசபக்தி நிகழ்ச்சிகளை வழங்கினர்.

இலங்கை கடற்படை இசைக் குழுவினர் தேசபக்தி பாடல்களை இசைத்து நிகழ்வுக்கு பெருமை சேர்த்தனர்.

அதேநேரம், யாழ்ப்பாணம், கண்டி, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாக்கள் நடைபெற்றன.

“விக்சித் பாரத்” (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை நோக்கிய அர்ப்பணிப்பை மீளவலியுறுத்தி, பெருமையுடன் இலங்கையிலுள்ள இந்தியப் புலம்பெயர் சமூகம் இந்நிகழ்வில் பங்கேற்றது.

கண்டி உதவி இந்தியத்தூதுவர் வீ.எஸ் சரன்யா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவித்தூதுவரால் இந்தியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முருகுவின் ஆசிச் செய்தியும் வாசிக்கப்பட்டது.

இந்திய நடனங்களும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

1947ம் ஆண்டு ஓகஸ்ட மாதம் 15ம் திகதி பிரித்தானியரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வைபவத்தில் சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் டாக்டர். ஹன்சக விஜயமுனி, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமவங்ச, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் ட்ரன்ஸ் மதுஜித் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய தலைநகா் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் முப்படைகளின் மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி, 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் ஆற்றிய உரையில் ,

பாக். தீவிரவாதிகள், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தோருக்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. தீவிரவாதத்துக்கு நிதி அளித்து அதனை ஊக்கப்படுத்துவோரையும் அழிப்போம். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது. அணுசக்தி துறையில் மிக பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்த இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு எனது பாராட்டுகள். இந்தியாவுக்கு என்று விண்வெளி நிலையம் விரைவில் நிறுவப்படும். வெளிநாடுகளின் சமுக வலைதளங்களை நாம் ஏன் சார்ந்திருக்க வேண்டும்..? சொந்த நாட்டின் சமூக வலைதளம் குறித்து நமது இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். உலகின் சந்தையை இந்தியா ஆள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

indian independant day celebration sri lanka 6718

மேலும் வாசிக்க :

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!

சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசார​ணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular