Tuesday, October 14, 2025
HomeForeign Newsஇந்​தியா மற்றும் சீனாவுக்கு இடையே மீண்​டும் நேரடி விமான சேவை!

இந்​தியா மற்றும் சீனாவுக்கு இடையே மீண்​டும் நேரடி விமான சேவை!

india china direct flight resume again 7087

இந்​தியா மற்றும் சீனாவுக்கிடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை ஒக்​டோபர் 26ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலப்பகுதியில் இந்​தியா – சீனா இடையே விமான சேவை இரத்து செய்​யப்​பட்​டது.

அதே ஆண்டு ஜூன் 15ஆம் திகதி லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா – சீனா இராணுவ வீரர்​கள் இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது.

இதில் இந்​திய தரப்​பில் 20 வீரர்​கள், சீன தரப்​பில் 45 பேர் உயி​ரிழந்​தனர்.

இதன்​காரண​மாக, இரு நாடு​கள் இடையி​லான உறவில் மிகப்​பெரிய விரிசல் ஏற்பட்​டது.

கொரோனா பெருந்​தொற்​றுக்கு பிறகு உலகம் முழு​வதும் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்​பியது.

ஆனால், இந்​தியா – சீனா இடையே மீண்​டும் நேரடி விமான சேவை தொடங்​கப்​பட​வில்​லை.

சர்​வ​தேச அரங்​கில் இரு நாடு​களும் எதிரும் புதிரு​மாக செயல்​பட்டு வந்​தன.

கடந்த மே மாதம் இந்​தியா – பாகிஸ்​தான் இடையே 4 நாட்​கள் போர் நடை​பெற்​றது.

அப்​போது​கூட பாகிஸ்​தானுக்கு இராணுவ ரீ​தி​யாக சீனா பல்​வேறு உதவி​களை செய்​தது.

இந்த நிலை​யில், அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்கை சர்​வ​தேச அளவில் பல மாற்​றங்​களை ஏற்​படுத்​தி​யது.

ரஷ்​யா​விடம் இருந்து மசகு எண்​ணெய் கொள்வனவு செய்வதாக குற்​றம்​சாட்டி இந்​திய இறக்​குமதி பொருட்​களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்​தார்.

அமெரிக்​கா​வின் புதிய வரி விகிதம் கடந்த ஒகஸ்ட் மாதம் அமலுக்கு வந்​தது.

இந்த சூழலில் இந்திய ஜனாதிபதி திர​வுபதி முர்​முவுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங் சமீபத்​தில் இரகசிய கடிதம் ஒன்றை அனுப்​பி​யிருந்​தார்.

அதில், ‘சர்​வ​தேச விவ​காரங்​களில் இந்​தி​யா​வும், சீனா​வும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும்.

எல்​லை​யில் அமை​தியை ஏற்​படுத்த வேண்டும். அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு போரை தடுத்து நிறுத்த வேண்​டும்’என்று அழைப்பு விடுத்​திருந்​தார்.

மேலும், ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​கு​மாறு பிரதமர் மோடிக்கு சீன ஜனாதிபதி சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஏற்​றுக்​கொண்ட பிரதமர் மோடி, கடந்த ஒகஸ்ட் இறு​தி​யில் சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​றார்.

அப்​போது பேசிய மோடி, “இந்​தி​யா​வும் சீனா​வும் கூட்​டாளி​கள்தான், எதிரி​கள் அல்ல” என்று கூறியுள்ளார். இதே கருத்தை சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங்​கும் வழிமொழிந்​தார்.

உச்சி மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக பிரதமர் மோடி​யும், ஜனாதிபதி ஜி ஜின்​பிங்​கும் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

அப்​போது மீண்​டும் நேரடி விமான சேவையை தொடங்​க​ முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி, மேற்கு வங்​கத் தலைநகர் கொல்​கத்தா – சீனா​வின் குவாங்சூ நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை ஒக்​டோபர் 26ஆம் திகதி தொடங்கவுள்ளது.

‘இரு நாடு​களின் விமான போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் சமீபத்​தில் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

இதில் எட்​டப்​பட்ட முடி​வின்​படி, அக்​டோபர் இறு​தி​யில் இரு நாடு​கள் இடையே நேரடி விமான சேவை தொடங்​கப்​படு​கிறது’ என்று மத்​திய வெளி​யுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

கொரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு முன்​பாக இந்​தியா – சீனா இடையே மாதம்​தோறும் 539 நேரடி விமான சேவை​கள் இயக்​கப்​பட்டு வந்​தன.

எயார் இந்​தி​யா, சீனா சதர்ன் எயார்லைன்​ஸ், சீனா ஈஸ்​டர்ன் எயார்லைன்ஸ் நிறு​வனங்​கள் பயணி​கள், சரக்கு விமானங்​களை இயக்கியுள்ளன.

இதன்​ மூலம் மாதம்​தோறும் இரு நாடு​களை சேர்ந்த 1.25 இலட்​சம் பேர் விமான பயணம் மேற்​கொண்​டனர்.

கொரோனா காலத்​தில் விமான சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது. இதன்​பிறகு, சீனா செல்ல வேண்​டிய இந்​திய விமான பயணி​கள் பங்களாதேசம், ஹாங்​காங், தாய்​லாந்​து, சிங்​கப்​பூர் வழி​யாக சீன நகரங்​களுக்கு சென்​றனர்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங்​கின் கடிதம் காரண​மாக இந்​தி​யா, சீன உறவில் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கி​யுள்​ளது.

படிப்​படி​யாக டெல்​லி, மும்பை உள்​ளிட்ட நகரங்​களில் இருந்​தும் சீன நகரங்​களுக்கு விமான சேவை தொடங்கப்படும்.

இதே​போல சீன தலைநகர் பெய்​ஜிங், அந்த நாட்​டின் வர்த்தக தலைநகர் ஷாங்​காய் உள்​ளிட்ட நகரங்​களில் இருந்து இந்​தி​யா​வுக்கு விமான சேவை​கள் தொடங்​கப்​படும்.

தற்​போது டெல்​லி​யில் இருந்து வேறு நாடு​கள் வழி​யாக பெய்​ஜிங் செல்ல ரூ.20,000 வி​மான கட்​ட​ணம் வசூலிக்கப்படு​கிறது.

நேரடி வி​மான சேவை தொடங்​கப்​படு​வ​தால் இந்த கட்​ட​ணம் 20 சதவீதம் வரை குறை​யும்​. பயண நேர​மும்​ குறை​யுமென தெரிவித்துள்ளது.

india china direct flight resume again 7087

மேலும் வாசிக்க >>>

விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு! (காணொளி)

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க அனுமதிக்க மாட்டேன் – டிரம்ப்

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்பு

தேசிய விருதுகளை பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ்!

https://www.bbc.com/tamil/articles/cy042y5jyzro

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular