Monday, February 10, 2025
HomeHealth Newsநாட்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

increasing number diabetic patients 3022

நாற்பது வயதை கடந்த நான்கு பேரில் ஒருவருக்கு அதாவது 25 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நீரிழிவு நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் டொக்டர் மந்திக்க விஜேரட்ன இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிகமான நீரிழிவு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும், அதில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு அதிகரித்துள்ளது எனவும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இந்த மாவட்டங்களில் சுமார் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது எனவும், அதில் 33 விகிதமானவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமீபகாலமாக நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இதயம் தொடர்பான நோய்கள், கை, கால் நரம்பு தளர்ச்சி, கண்பார்வையில் குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதனால் பாதிப்புகள் அதிகமாகி சிறுநீரகங்களும் செயலிழக்கும் அபாயம் காணப்படுகின்றது எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், நீரிழிவுக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளும்படியும், உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் வைத்தியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

  • மேலும் செய்திகள்

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular