important srilanka foreign employment bureau 1007
இஸ்ரேலில் வேலை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது..
பணம் செலுத்தியுள்ள இஸ்ரேலில் தொழில் எதிர்ப்பார்த்துள்ளவர்கள் எவரும் மீண்டும் பணம் செலுத்தத் தேவையில்லை என சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத நபரொருவரிடம் இருந்து இஸ்ரேலில் வேலை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் 14,700 ரூபாவை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று (21) பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
important srilanka foreign employment bureau 1007