import of heifers from pakistan 4243
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து சுக்கிலவிருத்தி சினை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,
”உயரிய தரத்திலான மரபணு இயலுமைகளைக் கொண்டுள்ள பால் மாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக 2023 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளில் 100 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பினும், குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளால் தேவையான பால் மாடுகளை விநியோகிப்பதற்கு இதுவரைக்கும் இயலாமல் போயுள்ளது.
சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய UCMAS மாணவர்கள் சாதனை!
வடக்கில் மக்களைப் பழிவாங்கும் அரச அலுவலர்கள்! – ஆளுநர் கவலை
யாழில் சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் காயம் மிருசுவில் பகுதியில் சம்பவம்!
அதனால் நேரடியாக இரண்டு அரசுகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களாகப் பொருத்தமான கறவை மாடுகளைக் கொள்வனவு செய்வதற்கான இயலுமை தொடர்பாக நாடுகள் சிலவற்றிலிருந்து தகவல்கள் கேட்டறியப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இடையீட்டின் கீழ் பாகிஸ்தான் வணிக அபிவிருத்தி அதிகாரசபையால் சஹிவால் (Shahiwal) மற்றும் நிலிரவி (Niliravi) வகைகளைச் சார்ந்த ஏழு (07) சுக்கிலவிருத்தி கிடாரி சினை மாடுகளை எமது நாட்டுக்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சுக்கிலவிருத்தி கிடாரி சினை மாடுகளை இறக்குமதி செய்து சுக்கிலங்களை விருத்தி செய்யும் வரைக்கும் சஹிவால் வகையைச் சார்ந்த 20,000 சுக்கில சினைகளை இந்தியாவின் தேசிய பால் அபிவிருத்திச் சபை மூலம், அரசுகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களாகக் கொள்வனவு செய்வது பொருத்தமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கிடையில் சஹிவால் இனத்தைச் சேர்ந்த ஐந்து (05) பால் மாடுகள் மற்றும் நிலிரவி 3 இனத்தைச் சேர்ந்த இரண்டு (02) இனையும் கொள்வனவு செய்வதற்கும், 20,000 சுக்கில சினைகளை இந்திய பால் அபிவிருத்திச் சபையின் அரசுகளுக்கிடையிலான கொள்வனவாகப் பெற்றுக் கொள்வதற்கும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” என்றார்.
import of heifers from pakistan 4243

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ‘எலும்புக்கூடு போல் தோற்றமளித்த’ மர்ம கைதி

மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு – லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்
